திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் வில்லியம்ஸ். இவருக்கும் சிங்கம்பறையை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 21ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று மாமனார் வீட்டில் கறி விருந்து சாப்பிட்ட வில்லியஸ்க்கு திடீரென வாந்தி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து முக்கூடல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.