கீரமங்கலம் பகுதியை சேர்ந்த அப்துல் குத்தூஸ். ஆட்டோ டிரைவரான இவர் கைகாட்டிக்கு தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் அப்துல் குத்தூஸ் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அப்துல் குத்தூசை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.