கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-10-27 02:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராலிமலை: விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி திருப்பதி (47). இவருக்கும் விருதாப்பட்டியை சேர்ந்த சாமிக் கண்ணு, அவரது மகன் ராஜேஷ் ஆகியோருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பதியின் கணவர் வேலு இறந்த வழக்கில் கோர்ட் டில் சாட்சி சொல்லுவதற்காக அதே ஊரைச்சேர்ந்த அஞ்சம்மாள், வேலுச்சாமி ஆகியோர் ராஜாளிபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ராஜேஷ், சாமிக்கண்ணு ஆகியோர் திருப்பதி, அஞ்சம்மாள் வேலுச்சாமி ஆகியோரை தனக்கு எதி ராக சாட்சி சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகதிருப்பதி அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப் பதிந்து ராஜேஷ், சாமிக்கண்ணு ஆகியோரை கைது செய்தனர்.

Similar News