வடகாடு பகுதியில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

குற்றச் செய்திகள்

Update: 2024-10-27 02:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வடகாடு அடுத்த ஆலங்காடு பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் மணல் கடத்தி வந்தது கணபதி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்து வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News