திருவேங்கைவாசல் தனியார் நிறுவனத்தில் மேற்கு வங்கம் புல்லியாவை சேர்ந்த கிருஷ்ணா பட கிஸ்கு, என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வீட்டின் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று உயிரிழந்தார், இதுகுறித்து உரிமையாளர் ராஜா அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.