தீபாவளி முன்னிட்டு திருவேங்கடத்தில் ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம் விவசாயிகள் வியாபாரிகள் கவலை
தீபாவளி முன்னிட்டு திருவேங்கடத்தில் ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் ஆட்டுச் சந்தை தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டு சந்தையாக இயங்கி வருகிறது. இந்த ஆட்டுச் சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுவது திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஆடுகளை விற்பனை செய்ய விவசாயிகளும், அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகளும் வருவார்கள். இதில் திருவேங்கடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஆடுகளை விற்பனை செய்ய விவசாயிகளும், அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகளும் வருவார்கள். இந்த ஆண்டு தீபாவளி நாளை மறுநாள் கொண்டாடப்படுதையொட்டி திருவேங்கடம் ஆட்டுச் சந்தை மிக அதிகளவில் வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. வியாபாரிகளும் அதிக அளவு வரவில்லை. ஆனாலும் ஆடுகளின் விலை சற்று உயர்ந்தே காணப்பட்டது. ஆடுகளின் வயது மற்றும் தரத்தை பொறுத்து கிலோ சுமார் ரூ.600 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. இளம் குட்டி ரூ.1500 வரை விற்பனையானது. சுமார் 20கிலோ கொண்ட கிடா ரூ.15 ஆயிரம் வரை விலை போனது. இதனால் வாரந்தோறும் வழக்கமாக நடைபெறும் அளவிலேயே இன்று ரூ.20 லட்சம் வரை விற்பனை நடைபெற்றது. இது குறித்த பகுதி விவசாயிகளும் வியாபாரிகளும் கவலை தெரிவித்தனர்.