தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி சார்பில் வருகின்ற 31ம் தேதி நடைபெற உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகள் குறித்து பொது மேலாளர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார். அதில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்க உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.