புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு ஜெகதாபட்டினம் சேர்ந்த மீனவர்கள் குடும்பத்தினர்கள் சிலர் மனு கொடுக்க வந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்பலனார் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.