புதுகை காமராஜபுரத்தை சேர்ந்த சங்கரன். நேற்று மதியம் 2 மணிக்கு காமராஜபுரம் 20 ஆம் வீதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி உஷாராணி அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை செய்கின்றனர்.