களக்காட்டில் போக்குவரத்து வசதி இல்லாததால் அவதி!
போக்குவரத்து வசதி இல்லாததால் அவதி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக இரவு 9.30 மணிக்கு தென்காசியில் இருந்து களக்காடு வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டு விட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.