வேலூர் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு புதிய டிராக்டர்.

வேலூர் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு புதிய டிராக்டர் பேரூராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

Update: 2024-10-30 13:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர் அக்,30: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 15 ஆவது நிதிக்குழு நிபந்தனை மான்யம் இரண்டாவது தவணை திட்டம் 2023- 2024 நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஒரு பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய டிராக்டர் கொள்முதல் செய்யப்பட்டது. டிராக்டருக்கு புதிய ஓட்டுநர்கள் பணி நியமித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று பரமத்தி வேலூர் பேரூராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் ராஜா உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News