பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் பசும்பொன்னில் மரியாதை
பசும்பொன்னில் மரியாதை
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று (அக்டோபர் 30) நெல்லை சந்திப்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 31) இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் சிலைக்கு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்தினார்.