நாமக்கல்: அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய சமையல் போட்டி மற்றும் கண்காட்சி ஆட்சியர் பங்கேற்பு.

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறுதானிய சமையல் போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வினை நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

Update: 2024-11-01 15:44 GMT
நாமக்கல் மாவட்ட சமூக நலத் துறையானது "பெண் குழந்தைகளை காப்போம்..... பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் அடிப்படையில் "சிறு தானிய சமையல் போட்டி மற்றும் கண்காட்சி" நிகழ்வினை நாமக்கல் - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் சாலை, நாமக்கல் தெற்கு வளாகத்தில் நடத்தியது. நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கல்லூரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நியூட்ரிசன் & டயட்டிக்ஸ் துறையினை சேர்ந்த 17 மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், சிறுதானிய கண்காட்சி போட்டியில் இத்துறையின் ஏ. என். ஹசீன் மெகமுதா, முதலாமிடமும், ஏ. நந்தினி, இரண்டாம் இடமும் பெற்றனர். பி. வேதா, அடுப்பில்லா சமையல் போட்டியில் 4-ம் இடம் பெற்றார். இவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ச. உமா பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில், இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகளையும், இத்துறை உதவிப் பேராசிரியைகள் ஆர் . ரூபா & பி. ஶ்ரீ ரேணுகாதேவி ஆகியோரையும் கல்லூரி தலைவர் கே . நல்லுசாமி, செயலர் எஸ் . செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர் . லட்சுமிநாராயணன், வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் பாராட்டினர்.

Similar News