ஜம்புலிப்புத்தூர் கோயில் தெப்பத்தில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பத்தை சுற்றி ரசித்து செல்கின்றனர்.

Update: 2024-11-01 15:27 GMT
ஆண்டிபட்டி: அருகே ஜம்புலிப்புத்தூர் கோயில் தெப்பத்தில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலையில் முடிந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த புனரமைப்பு பணிகளில் உபயதாரர் பங்களிப்பில் ரூபாய் பல லட்சம் செலவில் கோயில் தெப்பம் சீரமைக்கப்பட்டது.கோயில் வளாகத்தில் கிடைக்கும் மழை நீர் குழாய் மூலம் தெப்பத்தில் சேரும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக தெப்பத்தில் இருந்த குறைந்த அளவு நீரில் தெப்பத்தில் வளரும் மீன்கள் தத்தளித்தன.இந்நிலையில் அடுத்தடுத்து பெய்த மழையால் கோயில் தெப்பத்தில் பாதி அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. சுத்தமான முறையில் பராமரிக்கப்படும் கோயில் தெப்பம் கோயிலுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பத்தை சுற்றி ரசித்து செல்கின்றனர்.விழா காலங்களில் மட்டும் கோயில் தெப்பத்தை சுத்தமான முறையில்பயன்படுத்துவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News