திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை செஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஒரு நாள் செஸ் போட்டி ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சொர்ண மஹாலில் இன்று (நவ.2) காலை நடைபெறுவதாக இருந்தது. இதற்காக செஸ் வீரர்களும் அவர்கள் பெற்றோர்களும் குவிந்தனர். இந்த நிலையில் போட்டியை நடத்துவதற்கு முறையான அனுமதியை காவல்துறையிடம் போட்டி நடத்துபவர்கள் பெறவில்லை என்று கூறி, காவல் துறையினர் போட்டியை நடத்த விடவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.