திருநெல்வேலி சந்திப்பில் அரசு சுவர் மற்றும் செண்டர் மீடியனில் அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உத்தரவின் பேரில் இன்று காலை தூய்மை பணியாளர்கள் அரசு சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள வால்போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து அப்புறப்படுத்தினர். மேலும் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.