வெள்ளியணை: மது போதைக்கு அடிமையான வாலிபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
வெள்ளியணை: மது போதைக்கு அடிமையான வாலிபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.
வெள்ளியணை: மது போதைக்கு அடிமையான வாலிபர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், வெள்ளியணை, வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை மகன் முருகேசன் வயது 33. இவரது மனைவி தேவி வயது 28. முருகேசன் அண்மை காலமாகவே மது போதைக்கு அடிமையாகி இருந்தார். இதனால் விரக்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்த முருகேசன், நவம்பர் 1-ம் தேதி காலை 11 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த மனைவி தேவி வீடு திரும்பிய போது தனது கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும்,இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த முருகேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியனை காவல்துறையினர்.