ஸ்ரீ அருள்மிகு கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் கொடியேற்று நிகழ்ச்சி
எடப்பாடி அடுத்த சித்தூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண சுப்பிரமணியர் திருக்கோயிலில் சூரசம்ஹாரம் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சித்தூர் அருள்மிகு கல்யாண சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி இன்று நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…. தமிழ் கடவுள் முருக பெருமானுக்கு தமிழ் மாதங்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது இதில் முக்கிய நிகழ்ச்சியாக கந்த சஷ்டி பெருவிழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்ற நவம்பர் 7 ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது அந்த விழாவை முன்னிட்டு இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சித்தூர் அருள்மிகு கல்யாண சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்கார பெருவிழா கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கங்கணம் கட்டிக் கொண்டனர். அதற்கு முன்னதாக அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன தொடர்ந்து அருள்மிகு கல்யாண சுப்பிரமணியர் சுவாமிக்கு திருமஞ்சல் பால் தயிர் பன்னீர் போன்ற 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானை கடவுளுக்கும் பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பின்னர் கொடி மரத்திற்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கொடியேற்று விழாவின் ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர் இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டுச் சென்றனர்.