நாமக்கல்: உழவர் சந்தையில் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் திடீர் ஆய்வு.

நாமக்கல் உழவர் சந்தை மற்றும் மாவட்ட மைய நூலகம் ஆகிய பகுதிகளில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆய்வு.

Update: 2024-11-04 13:15 GMT
நாமக்கல் உழவர் சந்தையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஆகியவை உள்ளே புகுவதால் விவசாயிகள் மற்றும் காய்கறி வாங்க வரும் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதை அறிந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் வேளாண் விற்பனை துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் அப்பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து உழவர் சந்தையில் மழைநீர், கழிவுநீர் ஆகியவை உள்ளே புகாமல் கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல வடிகால் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் அப்போது அவருடன் மாநகராட்சி மேயர் கலாநிதி, மேற்கு நகர கழக செயலாளர் ராணா ஆனந்த், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நாசர், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர், மாநகராட்சி செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் கண்ணன், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி, மைய நூலக அலுவலர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர் டாக்டர். விஜய் ஆனந்த், வார்டு செயலாளர் புவனேஸ்வரன், மாவட்ட சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் உமாசங்கர், சமூக ஆர்வலர் தில்லை சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News