பி ஏ பி வாய்க்காலில் கொட்டப்படும் கோழி கழிவுகள்
வெள்ளகோவில் அருகே கண்ணபுரம் பகுதியில் பிஏபி வாய்க்காலில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
வெள்ளகோவிலுக்கு பரப்பிக்குளம் ஆழியார் பாசன வாய்க்காலில் தண்ணீர் வழங்கப்படுகின்றது. செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, பொங்கலூரில் இருந்து வரும் இந்த வாய்க்காலில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணைகளிலிருந்து இறந்த கோழிகளை வாய்க்கால் தண்ணீரில் போட்டு விடுகின்றனர். மேலும் வழியோர நகரங்களில் குப்பைகளை வாய்க்கால் தண்ணீரில் கலந்து வருகிறது. இவை வாய்க்கால் குழாய்கள், பாலங்கள், வாய்க்கால் மதகுகளில் அடைத்து தண்ணீர் தேங்கி நின்று விடுகிறது. தற்போது வெள்ளகோவில் கண்ணபுரம் பகுதியில் பல இடங்களில் வாய்க்கால் அடைப்பட்டு இருக்கின்றது. குப்பைகளை அப்புறப்படுத்தினால் தான் பாசன நீர் எடுக்க முடிகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஏபி வெள்ளகோவில் கிளை நீர் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.