நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே வரும் 14-ஆம் தேதி மாஞ்சோலை மக்களை சீமான் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.