திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மானூர் உபமின் நிலையத்தில் நாளை (நவ.06) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாம்குளம், கோனார்பட்டி பிள்ளையார் குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.