பாண்டமங்கலம் துப்புரவு பணியாளர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை.
பாண்டமங்கலம் துப்புரவு பணியாளர் இறந்தது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்,நவ. 4: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலம் பாவடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (38).இவரது மனைவி சித்ரா (36). இவர்களுக்கு மகிலன் (5) என்ற மகனும், காருண்யா( 4) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். ராஜ்குமார் கடந்த 10 வருடமாக வெங்கரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். ராஜ்குமார் உடல் நிலை பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 31- ஆம் தேதி காலை வெகு நேரமாகியும் எழுந்தரிக்காததால் அவரது மனைவி சித்ரா அவரை தட்டி எழுப்பி உள்ளார். ஆனால் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் உடனடியாக அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சித்ரா வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.p