கடம்பன்குறிச்சியில் தந்தை உயிரிழந்ததால் விரக்தியில் மகன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை.

கடம்பன்குறிச்சியில் தந்தை உயிரிழந்ததால் விரக்தியில் மகன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை.

Update: 2024-11-05 13:02 GMT
கடம்பன்குறிச்சியில் தந்தை உயிரிழந்ததால் விரக்தியில் மகன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், கடம்பன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது 47. இவரது மனைவி வீறுசின்னு வயது 44. ஈஸ்வரனின் தந்தை செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் காலமானார். தந்தை மீது அதிகப்படியான பற்று கொண்டிருந்தார் ஈஸ்வரன். தந்தை காலமானதால் அதிர்ச்சி அடைந்த அவர் அன்றையிலிருந்து மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நவம்பர் 4-ம் தேதி காலை 7:15 மணியளவில், கடம்பன்குறிச்சி அருகே உள்ள ஒட்டன் குளம் பகுதியில் உள்ள சக்திவேல் தோட்டத்தில் சல்பைடு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த ஈஸ்வரனின் மனைவி காவல்துறையினர்க்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஈஸ்வரனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News