ராசிபுரம் அருகே பட்டப் பகலில் மூதாட்டியை தாக்கி 9 1/2 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் பணத்தை வீடு புகுந்து திருடி சென்ற மர்ம நபர்கள்.
ராசிபுரம் அருகே பட்டப் பகலில் மூதாட்டியை தாக்கி 9 1/2 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் பணத்தை வீடு புகுந்து திருடி சென்ற மர்ம நபர்கள்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டி பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரது மனைவி கமலம்(61) இவர் தனது கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தினமும் தனது விவசாய நிலத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம் மதியம் 2 மணி அளவில் தனது விவசாய நிலத்தில் மூதாட்டி கமலம் பணிபுரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்த நிலையில் வயலில் இருந்த கமலம் வீட்டிற்கு வந்த மர்ம நபர்களை பார்ப்பதற்காக அங்கிருந்து வந்து கொண்டிருந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து பீரோவில் இருந்து 9 1/2 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது மூதாட்டி கமலம் இருவரையும் தடுக்க முயன்ற போது திருடர்கள் இருவரும் மூதாட்டியை தாக்கியாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை மூதாட்டி துரத்தி சென்ற நிலையில் திருடர்கள் தப்பிச் சென்றனர். பின்னர் மூதாட்டி கூச்சிலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் மூதாட்டியை தாக்கி விட்டு வீடு புகுந்து 9 1/2 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.