வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.க்கள் பழனிசாமி, ராம்குமார், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் லாட்டரி விற்றது தெரியவந்தது. அங்கு நேரில் சென்ற போலீசார், அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த வீரமூப்பன், 59, விஷ்ணு, 24, ஆகிய இருவரை கைது செய்து, வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை பரிமுதல் செய்தனர்.