மக்கள் நீதி மய்யத்தின் மண்டல செயலாளர் நியமனம்

நாமக்கல் மாவட்ட செயலாளர் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல செயலாளராக நியமனம்

Update: 2024-11-05 16:04 GMT
மக்கள் நீதி மய்யத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள காமராஜ் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சேலம் மண்டல செயலாளராக நியமித்துள்ளார் மண்டல செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காமராஜ் சேலம்.நாமக்கல்.தருமபுரி.கிருஷ்ணகிரி.மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கமலஹாசன் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார் மண்டல செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காமராஜ் நற்பணி இயக்கத்தில் கடந்த 35 வருடங்களாக நற்பணி புரிந்து 2018 முதல் கடந்த 7 வருடங்களாக நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் மொத்தம் 42 வருடங்களாக கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து பல்வேறு நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக வேட்பாளராக போட்டியிட்டு சுமார் 7000 வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News