ஏரியில் விடப்பட்ட 5 ஆயிரம் மீன் குஞ்சுகள்
குமாரபாளையம் அருகே உள்ள ஏரியில் 5 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஏரியில் 5 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள வேளாங்காடு ஏரியில், ஊர் பொதுமக்கள் சார்பில் 5 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதற்கு தேவையான உணவுகள் ஏரியில் போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏரியில் மீன் குஞ்சுகளுக்கு உணவு போடப்படும். சுமார் 6 மாத காலம் இந்த மீன் குஞ்சுகள் வளர்ந்து பெரிய அளவில் ஆகும். இதன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் கோயில் திருவிழா, மற்றும் ஊர் பொதுப் பணிகளுக்கு செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.