வெள்ளகோவில் 2வது வார்டு பகுதியில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் - நோய் தொற்று ஏற்படும் அபாயம் - புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு 

வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் ஆகியவை பொதுமக்கள் குடியிருப்பு அருகே தனியார் நிலத்தில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு. மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2024-11-05 15:44 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சியானது 21 வார்டு பகுதிகளில் உள்ளடக்கியது. இதில் 2வது வார்டு பகுதியானது உப்பு பாளையம் ரோடு, ஐயப்பன் கோவில், கல்லாங்காடு வலசு, பத்திரப்பதிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம், வீரக்குமார் கோவில் ஆகிய முக்கியமான பகுதிகளை கொண்டது. இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சாக்கடையில் கழிவு நீர் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் முத்தூர் சாலை மற்றும் வள்ளியரச்சல் சாலை ஆகிய பகுதிகளில் மழை பெய்தால் அந்த மழை நீரானது சாக்கடை நீரில் கலந்து ஐயப்பன் கோவில் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான 2 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த நீரில் இருந்து முளைக்கும் தாவரங்கள் புதர் மண்டி கிடைக்கின்றது. அந்த தாவரத்திலிருந்து பஞ்சுகள் பறந்து குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதுடன் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகளையும் உண்டாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த தனியார் நிலத்தில் இது போல் தண்ணீர் தேங்குகின்றதை அப்புறப்படுத்த வேண்டும் மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். உடனடியாக தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி புதர் மண்டி செடிகள் வளர்ந்திருக்கும் இடங்களை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்தையும் , நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News