கோட்டைமேடு கருப்பண்ணசாமி கோவில் கலசம் வைக்கும் விழா.
பரமத்தி வேலூர் கோட்டைமேடு கருப்பண்ணசாமி கோவில் கலசம் வைக்கும் விழா நடைபெற்றது.
பரமத்திவேலூர்,நவ.5- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் ராஜா வாய்க்கால் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் கோட்டை கருப்பண்ணார் கோயிலில் கோபுர கலசம் வைக்கும் விழா நேற்று நடைபெற்றது. பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் ராஜா வாய்க்கால் அருகே கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை கருப்பண்ணார் கோயில் உள்ளது. இக்கோயிலில் விநாயகர், மாரியம்மன், சப்த கன்னிமார்கள், பேச்சியம்மாள் மற்றும் காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளது. இக்கோயிலில் தற்போது உள்ள மேற்கூரையில் கலசம் வைக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.