ராம் நகரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை.

ராம் நகரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை.

Update: 2024-11-05 14:14 GMT
ராம் நகரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் அருகே ராம் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் வயது 51. இவர் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, நல்லூரான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவருக்கு அப்பன்டிக்ஸ் அறுவை சிகிச்சை நடந்தது. ஆயினும் தொடர்ந்து இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த ஒரு மாதமாக கூடுதல் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தங்கராஜ், வலி தாங்க இயலாததால் நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணியிலிருந்து 6:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்த அவரது மனைவி ரேவதி வயது 39 என்பவர் அறிவித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த தங்கராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Similar News