நாமக்கல்:டிரினிடி கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நாமக்கல்லில் மோகனூர் சாலையில் அமைந்துள்ள டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகடிவதை மற்றும் பாலியல் தொல்லை எதிர்ப்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-11-05 13:47 GMT
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பகடிவதை & பாலியல் தொல்லை எதிர்ப்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை முனைவர் அ. லதா, 'சமூக வலைத் தளங்கள் & பெண்கள் பாலியல் துன்புறுத்தல் - ஒரு ஆய்வு' என்ற தலைப்பில் மாணவிகளிடம் பேசினார். சமூக வலைத்தளங்கள் இந்த உலகினை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. நம்மில் பெரும்பாலோரிடம் தொடுதிரை அலைபேசி உள்ளது. இதில், முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப் என சமூகவலைத் தளங்களை நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் பலன்கள் இருந்தாலும், குறைபாடுகளும் உள்ளன. குறிப்பாக, சில கொடுர புத்தி கொண்டவர்கள் புகைப்படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிடுகிறார்கள். எனவே, மாணவிகளான நீங்கள் தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என இந்நிகழ்வில் அவர் பேசினார்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம் ‌ மாலதி செய்திருந்தார்.

Similar News