நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் எச்சரிக்கை
தேமுதிக பொறுப்பாளர் ஜெயச்சந்திரன்
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் புகழ்பெற்ற சாலை குமரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் தற்பொழுது கந்த சஷ்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவிலுக்கு செல்லக்கூடிய சாலை கரடு முரடாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக விரைவில் தார் சாலை அமைக்க வேண்டும், இல்லையென்றால் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெறும் என நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.