திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரை சேதமடைந்த சாலையை சீரமைக்க உத்தரவிடக்கோரி சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் தரமான சாலை அமைக்க வேண்டும் எனக் கூறி வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.