பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாதி ராஜா, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி தலைவர் முருகேசன் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் மனு.,

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க தலைவர் பூதா. அருள்மொழி, மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் ஆகியோரை அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

Update: 2024-11-06 07:25 GMT
பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க தலைவர் பூதா. அருள்மொழி, மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் ஆகியோரை அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் பொள்ளாச்சி -நவம்பர்- 6 கடலூர் மாவட்டத்தில் நடந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை பற்றியும்,மாநில வன்னியர் சங்க தலைவர் பூதா. அருள்மொழி மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் ஆகியோர் பற்றி அருவருக்கத்தக்க வார்த்தையில் பேசியும், கொலை மிரட்டல் விடுத்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாதி ராஜா தலைமையில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி தலைவர் முருகேசன், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் கலைக்குழு சுப்பிரமணி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேல் ஆகியோர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் பற்றியும்,வன்னியர் சங்க தலைவர் பற்றியும்,மாவட்ட செயலாளர்கள் பற்றியும் அருவருக்கத்தக்க பேசி கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை கட்சியின் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. பேட்டி- முருகேசன், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, தலைவர்.

Similar News