ஊத்தங்கரையில் பா.ம.க சார்பில் வட்டாட்சியர் அலுவலம் முற்றுகை போராட்டம்.

ஊத்தங்கரையில் பா.ம.க சார்பில் வட்டாட்சியர் அலுவலம் முற்றுகை போராட்டம்.

Update: 2024-11-06 08:33 GMT
ஊத்தங்கரையில் பா.ம.க சார்பில் வட்டாட்சியர் அலுவலம் முற்றுகை போராட்டம். 45 பேர் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடந்தது. இந்த போராட்டத்தில் கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்ல கிராமத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழியை இழிவுபடுத்தி பேசி, கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகிகளை கண்டித்து நடந்த இந்த போராட்டம் ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கர், நகர தலைவர் நாச்சியப்பன், நகர துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் வெல்லியரசு, அருண், சென்னகிருஷ்ணன், செல்வம், ராஜேந்திரன், குமார், ரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த போராட்டத்தில் சமூக முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் மூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பில்லா மாதேஷ், மாவட்ட செயலாளர் அக்ரி மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கைது செய்ய வேண்டி கண்டன கோஷங்கள் எழுதினர். இதில் கவுன்சிலர்கள் குமரேசன், பூபதி, நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி, உழவர் பேரியக்கம் ராஜா, சிவா, கோவிந்தசாமி, சேட்டு, சின்னக்கண்ணு, சதீஷ், தமிழரசன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர், இந்த போராட்டம் அனுமதி இல்லாததால் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி நமச்சிவாயம் தலைமையில் ஊத்தங்கரை டி.எஸ்.பி சினிவாசன்,காவல் ஆய்வாளர்கள் முருகன், சந்திரகுமார், பாலமுருகன், ஜாஃபர் உசேன் உள்ளிட்ட உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 45 பா.ம.க வினரை கைது செய்து ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Similar News