ராசிபுரம் சின்ன மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா அலகு குத்தியும் அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திகடன்..

ராசிபுரம் சின்ன மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா அலகு குத்தியும் அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திகடன்..

Update: 2024-11-06 10:49 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் ஆண்டுத்திருவிழா கடந்த 23ம் தேதியில் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சமூகத்தினரின் சார்பில் மாரியம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா அழைத்துவரப்படுகிறார் கம்பம் நடும் நிகழ்ச்சியும், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், கொடியேற்றமும், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், அக்கினி குண்டம் பற்றவைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழாவானது நடைபெற்றது. பக்தர்கள் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் மஞ்சளாடை அணிந்து, தீச்சட்டி, அழகு குத்தி,வேப்பிலை ஏந்தி ஊர்வலமாக சென்று இறுதியாக தீக்குண்டம் இறங்கினர். பெண்கள் தங்களது கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News