நடிகை கஸ்தூரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய வேண்டும். தேக்கமலை கரூரில் பேட்டி.
நடிகை கஸ்தூரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய வேண்டும். தேக்கமலை கரூரில் பேட்டி.
நடிகை கஸ்தூரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய வேண்டும். தேக்கமலை கரூரில் பேட்டி. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் தமிழக மக்களை அவதூறாக பேசியதாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் கஸ்தூரிக்கு எதிராக கண்டனங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் நடிகை கஸ்தூரியை கண்டித்து உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, தமிழக மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் தெலுங்கு பேசும் தமிழ் மக்களை அவதூறாக ,வேண்டும் என்றே அவமான படுத்தும் வகையில் பேசி உள்ள நடிகை கஸ்தூரியை உழைக்கும் மக்கள் விடுதலை கழக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தான் பேசியதற்கு தற்பொழுது கஸ்தூரி மன்னிப்பு கேட்டிருந்தாலும் கூட,தமிழகத்தில் உள்ள ஐந்து கோடி தெலுங்கு பேசும் தமிழ் மக்களின் உள்ளங்கள் கொதித்து போய் உள்ளன.தமிழக முதல்வர் இதில் தலையிட்டு நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். மேலும் வரும் நவம்பர் 11ஆம் தேதி கரூர் தபால் நிலையம் முன்பு நடிகை கஸ்தூரியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.