காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு வலுப்படுவதற்கு மிகவும் உத்வேகம் அளிப்பது கிராம காங்கிரஸ் கமிட்டிகள்!- நாமக்கல்லில் செல்வபெருந்தகை பெருமிதம்
எருமப்பட்டி , கோணங்கிபட்டி ஒன்றியத்தில், 10 உறுப்பினர்கள் கொண்ட கிராம கமிட்டி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் முதலாவது காங்கிரஸ் கிராம கமிட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கிராம, பேரூர், நகர, மாநகர பிரதிநிதிகள் கூட்டம் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பீ.ஏ.சித்திக் வரவேற்றார்.அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எஸ்.என். ஹெக்டே, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சொர்ணாசேதுராமன், அமைப்புச் செயலாளர் ராம்மோகன்,சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி,மாநில செய்தி தொடர்பாளர் மருத்துவர் பி.வி.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பங்கேற்று பேசுகையில்..... நாட்டு மக்களின் வரிப்பணத்தை, மத்திய அரசு பெரு நிறுவனங்களுக்கு கடனாக வழங்கி வருகிறது. அதானி அம்பானி போன்ற நிறுவனங்களை வளர்த்தெடுக்கிறது. ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. வெளியுறவு கொள்கை சீரழிந்துள்ளது. அண்டை நாடுகள் நம்மிடம் கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லாத நிலை காணப்படுகிறது. இவ்வாறான தேசத்தை மறு கட்டமைக்க வேண்டுமெனில் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும். அதற்கு கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். கிராம கமிட்டியை வலிமைப்படுத்தினால் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெறும். ராகுல் காந்தி எவ்வாறு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த, பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று நடைபயணம் செய்தாரோ, அவரது வழியில் நிர்வாகிகள் அனைவரும் கட்சியை வலிமைப்படுத்த ஒருங்கிணைய வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கும் உரிமை மற்றும் அதிகாரத்தையும், வரலாற்றையும் காங்கிரஸ் முன்னோடிகள் நமக்கு பெற்றுத் தந்துள்ளனர். 139 ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்று நிலையான கொள்கை கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மோடி கூறினார். ஆனால் தற்போது பாஜகவிற்கு அவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த முறை ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பது உறுதி. காங்கிரஸ் ஆட்சியில்தான் மக்கள் நலனுக்கான, உணவு உறுதி, தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.வேளாண்மை, வெண்மை புரட்சிகளை காங்கிரஸ் அரசு செய்தது. தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று,கிராம கமிட்டிகளை காங்கிரஸ் கட்சி உருவாக்க உள்ளது. அனைத்து கொள்கை, கோட்பாடுகளும் கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. 15 நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம, பேரூர், நகர, வட்டார கமிட்டிகளை நிர்வாகிகள் ஏற்படுத்து வேண்டும். இந்த பணிகள் முடிவடைந்ததும் காங்கிரஸ் கட்சியின் தரவுகளை இணையத்தில் வெளியிட உள்ளோம்.டிசம்பர் .9-ஆம் தேதி சோனியா காந்தி பிறந்தநாள் என்பதால், கன்னியாகுமரியில் கிராம தரிசனம் நிகழ்ச்சியை தொடங்க உள்ளோம். சென்னையில் இதற்கான முகாம் அமைக்கப்படும். இந்த முகாம்கள் வாயிலாக பெறப்படும் கோரிக்கைகளை அரசோடு பேசி நிறைவேற்றித் தருவோம். ராகுல் காந்தியின் புகைப்படங்களை கிராமப் பகுதிகளில் வைத்து, கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக, நாமக்கல் அடுத்த எருமப்பட்டி , கோணங்கிபட்டி ஒன்றியத்தில், 10 உறுப்பினர்கள் கொண்ட கிராம கமிட்டி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் முதலாவது காங்கிரஸ் கிராம கமிட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கூட்டத்தில்,சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி,நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவர்கள் வீரப்பன், ஷேக்நவீத், சுப்ரமணியம், நகர தலைவர் மோகன்,நகரத் தலைவர் எஸ்.ஆர்.மோகன், வட்டாரத் தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், சிங்காரம், குப்புசாமி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி, மகளிர் அணி ராணி பெரியசாமி, மகேஸ்வரி உள்ளிட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.