சங்கரன்கோவில் அருகே கோழிப்பண்ணை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கோழிப்பண்ணை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (45) இவருக்கு பாண்டியராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சங்கர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வயிற்று வலி காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று வயிற்று வலி காரணமாக சங்கர் விஷத்தை குடித்து விட்டார். இதனால் வீட்டில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.