கபிலர்மலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா.

கபிலர்மலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா இன்று நடைபெற்றது.

Update: 2024-11-07 15:32 GMT
பரமத்தி வேலூர்,நவ.7: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2-ம் தேதி கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கடந்த ஐந்து நாட்களாக முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மதியம் சூரனை வதம் செய்ய திருத்தேர் எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் நடைபெற்ற சூரசம்கார நிகழ்ச்சியில் முன்னதாக கஜமுகசுரன் மற்றும் சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்த முருகப்பெருமான் இறுதியில் சூரப்பதுமனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதி நாளாக வெள்ளிக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Similar News