பாண்டமங்கலம் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா.
பாண்டமங்கலம் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,நவ.7: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கடந்த 2-ம் தேதி கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கடந்த ஐந்து நாட்களாக முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் குதிரை,மான், மயில் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்தாம் நாள் நேற்று முருகன் அன்னை பார்வதி தேவியிடமிருந்து சூரணை வதம் செய்ய சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 6 மணிக்கு மேல் நடைபெற்ற சூரசம்கார நிகழ்ச்சியில் முன்னதாக கஜமுகசுரன் மற்றும் சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்த முருகப்பெருமான் இறுதியில் சூரப்பதுமனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதி நாளாக வெள்ளிக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.