ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா
ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் திருவிழா
ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவிற்காக 3 நாட்கள் அரிசி சோறு சமைக்காத கிராமங்கள் விரதத்தை முடிக்க பொங்கல் வைத்து வழிபாடு.. குழந்தை வரம்,கடன் பிரச்சனை,நோய் நொடி இன்றி வாழ பக்தர்கள் வாழைப்பழம் கொண்டு வரும் வாழைப்பழம் வைத்து ஊஞ்சல் உற்சவம்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டி புதூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அழியா இலங்கை அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் தீபாவளி முடிந்து அடுத்த வெள்ளிக்கிழமை கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். கோவில் திருவிழாவை கொண்டாடும் விதமாக கூனவேலம்பட்டி புதூர், குருக்குபுரம்,குருசாமி பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் தங்களது வீடுகளில் அரிசி சாதங்கள் சமைக்காமல் குழம்பு செய்வதற்கு எண்ணெயில் தாளிப்பதை தவிர்த்து அதற்கு மாறாக சோளம், கம்பு,திணை உள்ளிட்ட மாற்று உணவுகளை உண்டு விரதம் கொள்வார்கள். அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பிறகு சுற்றி உள்ள கிராம மக்கள் விரதத்தை முடிக்கும் விதமாக பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் திருவிழாவின்போது வாழைப்பழம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம் இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் வாழைப்பழங்களை கொண்டு வரும் வாழைப்பழங்களை வைத்து,வாழைப்பழம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.இதில் பக்தர்கள் கொண்டு வரும்போது அவர்கள் மனதில் வேண்டி நினைப்பது நடப்பதாகவும்,குழந்தை வரம், கடன் பிரச்சனையை நீங்க,தொழில் செழிக்க, நோய் நொடியின்றி வாழ பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேறுவதாகவும்,வாழைப்பழம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதாக பூசாரிகள் தெரிவித்தனர். இத்திருவிழாவானது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிழா காலங்களில் 3 நாட்கள் வீடுகளில் அரிசி சோறு சமைக்காமல் குழம்பு தாளிக்காமல் உண்பதை காலம் காலமாக கடைபிடித்து வருகின்றனர்.சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.