வேலகவுண்டம்பட்டி அருகே பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி.

வேலகவுண்டம்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி முன்னாள் ராணுவ வீரர் பலியானது குறித்து போலீசார் விசாரணை.

Update: 2024-11-10 15:51 GMT
பரமத்தி வேலூர், நவ.10- வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (71). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ரஞ்சிதம் (68). கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாணிக்கம் வேலகவுண்டம்பட்டிக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல தனது ஸ்கூட்டரில் வேலகவுண்டம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சாலையை கடக்க முயன்ற மாணிக்கம் மீது மோதியுள்ளது. இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News