கரூரில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிகளிலும் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கரூரில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிகளிலும் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கரூரில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிகளிலும் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கரூர் மாநகரட்சிக்குட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான ஆண்கள் மட்டும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு துவங்கியது. போட்டியில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி முழுவதும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் திண்டுக்கல் பி.எஸ். என்.எல். அணியும், என்.எஸ்.வி.வி. திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அணியும் மோதியதில் 52க்கு 46 என்ற புள்ளி கணக்கில் திண்டுக்கல் பிஎஸ்என்எல் அணி வெற்றி பெற்றது. இதேபோல் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் ஜி டி என் அணியும் கரூர் டெக்ஸிட்டி கூடைப்பந்து கழக அணியும் மோதியதில் 76க்கு 50 என்ற புள்ளி கணக்கில் ஜி டி எல் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.