கோவில் சொத்துக்களில் ஆக்கிரமிப்பு செய்தோருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 82 பேருக்கு நோட்டீஸ்ஜ்
அருள்மிகு அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் விநியோகம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அருள்மிகு அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலக்கரை, பழைய காவலர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 82 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அருள்மிகு அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபேராணை வழக்கு எண்: 5758/2021, நாள்: 05.09.24 தீர்ப்பின்படியும், ஈரோடு இணை ஆணையர் நீதிமன்ற வழக்கு எம்.பி.39/2023, நாள்: 06.06.2024 உத்திரவின்படியும், தாங்கள் ஆக்கிரமிப்புதாரர் என உறுதி செய்யப்பட்டுவிட்டதால், எதிர்வரும் 21.11.24 தேதிக்குள் தாங்கள் ஆக்கிரமிப்பை அகற்றிகொண்டு திருக்கோவிலுக்கு , சுவாதீனம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறினால் காவல்துறை, வருவாய்த்துறை முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிபிடப்பட்டுள்ளது.