நாமக்கல்: இரண்டு திருக்கோயில் திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைகளின் சார்பில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் 2 திருக்கோயில் திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-11-13 16:30 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நாமக்கல் மாவட்டம், வளப்பூர் நாடு, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோயில், கூவைமலை, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பேளுக்குறிச்சி, கூவைமலை, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, கலந்து கொண்டார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 2,268 திருக்கோயில்களில் குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் செயல்படுத்தி வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்டம், வளப்பூர் நாடு, அருள்மிகு அறப்பளீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் புதிய மூன்று நிலை இராஜகோபுரம் அமைக்கும் பணி மற்றும் கூவைமலை, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயிலில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் சுற்றுபிரகார கல் மண்டபம் கட்டும் பணி என மொத்தம் 3.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் தஅசோக் குமார், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் திரு. நந்தகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News