சிறையில் இருந்தவர் விசாரணைக்கு பின் கைது

கைது

Update: 2024-11-13 03:50 GMT
அரகண்டநல்லுார் , பச்சையம்மன் கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி சுவாமி கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் நகை திருடுபோனது. புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து தடைய அறிவியல் துறை வல்லுனர்களின் உதவியுடன் கைரேகை பதிவு செய்து ஆய்வு செய்து வந்தனர். இதில் கோவில் நகை திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் கடலுார் மாவட்டம், சிறுவரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கண்மணி ராஜன், 39; என தெரிய வந்தது. இவர் ஏற்கனவே அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் கண்மணி ராஜனை காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் அவர் கோவிலில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கோவில் நகை திருட்டு வழக்கில் கண்மணி ராஜனை கைது செய்து,கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News