கரூர்- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-11-14 03:44 GMT
கரூர்- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழியர்களின் கரூர் மாவட்ட சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழியர் சங்க தலைவர் பிரபாகரன் மற்றும் பொதுச் செயலாளர் விக்னேஷ் ஆகியோரை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு, வங்கி நிர்வாகத்திற்கு எதிராகவும், சங்கத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News