கரூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமைகள் உறுதிமொழி ஏற்று, விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் .

கரூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமைகள் உறுதிமொழி ஏற்று, விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் .

Update: 2024-11-14 12:59 GMT
கரூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமைகள் உறுதிமொழி ஏற்று, விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் . குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தை உரிமைகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் குழந்தைகள் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு, கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, காளியப்பனூர் வழியாக தான்தோன்றிமலை, அரசு கலைக்கல்லூரி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

Similar News